search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துடுப்பு படகு"

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றுள்ளது.
    • துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

    இதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41 நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது.

    துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங்; வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்திய அணி இதுவரை மொத்தம் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

    கேரளாவில் அனைவரையும் கவரும் அம்சங்களில் ஒன்றான நீள்படகு போட்டிகள், ஐபிஎல் பாணியில் 13 போட்டிகள் கொண்ட தொடராக அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. #Kerala #SnakeBoatRaces
    திருவனந்தபுரம்:

    சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற கேரளாவில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சங்களில் ஒன்று படகுப்போட்டி. நீள் வடிவ படகுகளை கொண்டு நடத்தப்படும் போட்டி அங்கு மிக பிரபலமானதாக உள்ளது. 100 முதல் 120 அடி நீளம் கொண்ட இந்த படகுகளில் சுமார் 100 பேர் வரை அமர்ந்து துடுப்பு போடுவார்கள்.

    இந்நிலையில், இந்த படகுப்போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் அதன் மூலம் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் ஈர்க்கவும் அம்மாநில அரசு புது ஐடியாவை செயல்படுத்தியுள்ளது.

    கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்த ஐபிஎல் பாணியில் சிபிஎல் (சாம்பியன் போட் லீக்) என்ற தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11-ம் தேதி ஆழப்புலாவில் உள்ள ஏரியில் தொடங்கும் இந்த தொடர் நவம்பர் முதல் தேதி வரை நடத்தப்படுகிறது.

    9 படகுகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 13 போட்டிகள் 13 இடங்களில் நடத்தப்பட உள்ளன. தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் படகு அணிக்கு ரூ.5 லட்சமும், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடிக்கும் படகு அணிகளுக்கு முறையே ரூ.3 லட்சம் மற்றும் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    சிபிஎல் தொடர் மூலம் கேரளாவின் சுற்றுலாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ள அம்மாநில சுற்றுலா துறை மந்திரி சுரேந்திரன், ‘இதன் மூலம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
    ×